10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை- தேனி பாசஞ்சர் ரயில்: பயணிகள் உற்சாகம்

Madurai to Theni Passenger train service starts after 11 years: வரும் 27 ஆம் தேதி முதல் மதுரை – தேனி இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால், தேனி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை – தேனி இடையேயான முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவையானது காலை 8.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்கள் வழியாக 9.35 மணிக்கு தேனி சென்றைடையும் எனவும், மறு மார்க்கமாக தேனியில் இருந்து மாலை 6.15க்கு புறப்பாடாகும் ரயிலானது ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்கள் வழியாக இரவு 7.35 மணிக்கு மதுரை ரயில்நிலையம் வந்தடையும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சிதம்பரம் ஒரு குடும்பம்; கார்த்தி சிதம்பரம் இன்னொரு குடும்பம்: கே.எஸ் அழகிரி புது விளக்கம்

12 பெட்டிகள் உள்ள பயணிகள் ரயிலானது தினசரி ரயிலாக இயங்கவுள்ளது.

மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான மதுரை டூ தேனி ரயில்சேவை 10ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிறைவேறியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மணி, மதுரை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.