Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்!

Motorola:
மோட்டோரோலா
ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் ரேஞ் மட்டுமில்லாமல், பல உயர்ரக போன்களையும் அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் சில பட்ஜெட்போன்களையும், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ போன்ற பிரீமியம் போன்களையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது.
Motorola
Frontier என்று குறிப்பிடப்படும் இந்த மொபைல், வெளியாகும்போது
Motorola Edge 30 Ultra
என்ற பெயரைப் பெறும் என்று கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


Xiaomi: இனி சியோமி போன்களில் லெய்கா கேமராக்கள் – மி பேன்ஸ் குஷி!

குறிப்பாக, மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடும் இரண்டாவது பிளாக்‌ஷிப் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியாகும் புதிய மோட்டோ போனில், 200MP மெகாபிக்சல் கேமரா, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Moto Edge 30 Leaks: ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளியாகும் மோட்டோ பிரீமியம் பட்ஜெட் போன்!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (MOTOROLA EDGE 30 ULTRA SPECIFICATIONS – Expected)

மோட்டோரோலா பிரண்டியர் அல்லது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 6.67″ இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே 144Hz ஹெர்ட்ஸ் வரை ரெப்ரெஷ் ரேட்டை வழங்கும். டிஸ்ப்ளே பஞ்ச் துளையில் 60MP மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.


Vivo X80: உள்ளங்கைல சினிமா கேமரா… விவோ களமிறக்கும் எக்ஸ் 80 போன்!

மிக முக்கியமாக இந்த போனில் புதிய மேம்பட்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் கொடுக்கப்படுகிறது. மேலும் 8GB / 12GB ரேம் இதில் இருக்கும். ஸ்டோரேஜ் மெமரியைப் பொருத்தவரை 128GB / 256GB என இரு தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மோட்டோவின் பவர்ஃபுல் Moto Edge 30 Pro போன் விலை இவ்வளவு தானா!

அல்ட்ரா மாடர்ன் அம்சமான, 200MP மெகாபிக்சல் முதன்மை கேமரா இதில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் இந்த போனில் OIS இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவும் கிடைக்கும்.

அதிதிறன் கொண்ட இந்த போனை சக்தியூட்ட 4,500mAh பேட்டரி பயன்படுத்தப்படும். இதை ஊக்குவிக்க 125W வாட் டர்போ ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மட்டுமே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் கொண்டு வெளியாகும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது உண்மை இல்லை. நிறுவனத்தின் வரவிருக்கும் மடிக்கக்கூடிய Moto RAZR 3 போனும் இதே புராசஸருடன் வெளியாகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.