தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? சூப்பர் ஆயுர்வேடிக் ஃபேஸ் பேக் இங்கே!

இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம்.

நாம் அனைவரும் ஆரோக்கியமான சருமத்திற்கான இயற்கை வைத்தியங்களான கடலை மாவு, முல்தானி மட்டி, உலர்ந்த பூ இதழ்கள், வேப்ப இலைகள் மற்றும் பலவற்றை முயற்சித்திருப்போம்.

ஆயுர்வேத மருத்துவர் அபர்ணா பத்மநாபன், இங்கு குறுகிய நேரத்திலும் சில எளிய படிகளிலும் தயாரிக்கக்கூடிய எளிய, ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.

தேன் மற்றும் எலுமிச்சை

* தேன் 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு -சில துளி

* இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்

*10 நிமிடம் கழித்து கழுவவும்.

உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இந்த குறிப்பை தவிர்க்க வேண்டும்.

இட்லி மாவு ஃபேஸ் பேக்

* தோசை அல்லது இட்லி மாவு

* ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

* நன்றாக கலந்து முகத்தில் தடவவும்

* கழுவவும்

வாழைப்பழம் மற்றும் தேன்

*வாழைப்பழம்

* சிறிது தேன்

* ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு

* நன்றாக கலந்து முகத்தில் தடவவும்

* கழுவவும்

பால் கிரீம் ஃபேஸ் பேக்

* கொதித்த பிறகு பாலில் இருந்து எடுத்த கிரீம்

* நேரடியாக முகத்தில் தடவவும்

வறண்ட சரும அழகிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

சிறப்பு பரிந்துரைகள்:

தோசை மாவு ஃபேஸ் பேக்

* தோசை மாவுடம் (தயிர் அல்லது சோடா இல்லாமல்) ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து, 3-4 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் சேமிக்கவும்

* முகம் மற்றும் உடலில் மட்டும் பயன்படுத்தவும்

பப்பாளி சாறு நேரடியாக தோலில் தடவலாம்.

பழுத்த வாழைப்பழத்தை, தேனுடன் பிசைந்து முகத்தில் தடவவும்

எலுமிச்சை மற்றும் தேன் கலந்து தடவவும்

இந்த குறிப்புகளை முயற்சி செய்து, ஒளிரும், ஆரோக்கியமான சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.