நைஜீரியாவில் சோகம் – சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

லாகோஸ்:
நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் ஆவர். 
இதுதொடர்பாக, மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறுகையில், கூட்ட நெரிசல் ஏற்படும்போது, உணவு வழங்கும் திட்டம் தொடங்கவில்லை. கதவு மூடப்பட்டு இருந்த போதிலும், நிகழ்ச்சி நடந்த பகுதியில் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் புகுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.