கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: விசிக பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செயலாளர் திராவிட மணியிடம் கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணை நடத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது தாயார் தொடர் … Read more

நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி

புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27-ம் தேதி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. மக்களவையில் இந்த விவாதத்தை ரத்து செய்துவிட்டு, நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என … Read more

Crew Review: தங்கத்தை கடத்தும் 3 ஏர் ஹோஸ்டஸ்.. முதல் சீனே மாட்றாங்க.. அப்புறம் செம ட்விஸ்ட்!

மும்பை: பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், ஜோதிகா, அஜய் தேவ்கன், மாதவன் நடித்த ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது. அதே போல தபு, கரீனா கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உள்ளிட்ட 3 பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி பொங்க நடித்து கலக்கிய ’க்ரூ’ (Crew) திரைப்படம் 157 கோடி

`முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர்!' – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த கிராம ஊராட்சியில், மாற்றுச் சமூகத்தினரின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளால், பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பல முறை அந்த கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மேலவளவு பின்னர், 1996-ம் … Read more

ஆந்திராவில் தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட ஒய்எஸ்ஆர் சிலை – செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை … Read more

ராமர் பாதையில் பள்ளங்கள் – 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்; உ.பி. அரசு உத்தரவு

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் பாதையில் பல்வேறு இடங்களில் பெரும் பள்ளங்கள் மற்றும் கசிவுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பணிகளில் அலட்சியமாக இருந்ததாக 6 அதிகாரிகளை உத்தரப் பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்த நிலையில் மாநிலத்தில் பெய்த முதல் கனமழையால், கோயில் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மற்றும் ராமர் கோயிலுக்குச் செல்லக்கூடிய ராமர் பாதையின் … Read more

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா.. கமல் – மனிஷா கொய்ராலா லேட்டஸ்ட் பிக்.. இந்தியன் 2வில் இருக்காரா?

சென்னை:  இந்தியன் 2 படத்திற்கான புரமோஷனை நடிகர் கமல்ஹாசன் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்தியன் படத்தில் நடித்த ஹீரோயின் மனிஷா கொய்ராலா மற்றும் கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் ஒன்று கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் அப்போதே இந்திய அளவில் படத்தை கொண்டு செல்ல

ஸ்டாலின் ஆட்சிகாலம் திமுகவின் இருண்டகாலம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாப்பனப்பட்டு, பனையபுரம், பனப்பாக்கம், தொரவி, கயத்தூர், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் கிராமங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “உங்கள் ஊரைச் சேர்ந்தவர் எம்எல்ஏவாக நீங்கள் பாமகவை ஆதரிக்கவேண்டும். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இங்கு வந்துள்ள பெண்களுக்கான தேர்தல் இதுவாகும். இத்தொகுதியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற்றால் அவர் நன்றாக இருப்பார். இப்பதவி முடிய இன்னும் … Read more

ம.பி., டெல்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மழையால் மேற்கூரை இடிந்தது

ராஜ்கோட்: மத்திய பிரதேசம், டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக டெல்லிவிமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் உள்ள மேற்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த மேற்கூரை 2 நாட்களுக்கு முன் … Read more

‛‛கதறிய கள்ளக்காதல் ஜோடி''.. நடுரோட்டில் படுக்க வைத்து தாக்கிய நபர்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி வைத்து தாக்குவதும், அதனை யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி Source Link