மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்- டிஜிசிஏ அதிரடி

ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

ராஞ்சி- ஐதராபாத் விமானத்தில் கடந்த மே 9-ம் தேதி சிறுவன் ஏறுவதற்கு இண்டிகோ நிறுவனத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. சிறுவன் அச்சத்தில் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுத்ததாகவும், இதனால் சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் எனவும் முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் கூறியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிசிஏ கடந்த மே 9ம் தேதி 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
 
இதுகுறித்து டிஜிசிஏ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இண்டிகோ ஊழியர்களால் சிறப்புக் குழந்தையைக் கையாள்வதில் ஏற்பட்ட குறைபாட்டால்  நிலைமையை மோசமாக்கியது.

மிகவும் இரக்கமான செயலால் குழந்தையை அமைதிப்படுத்தி, தீவிர நடவடிக்கையின் அவசியத்தைத் தவிர்த்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

சிறப்பு சூழ்நிலைகள் அசாதாரணமான பதில்களுக்குத் தகுதியானவை. ஆனால் விமானத்தின் ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட தவறிவிட்டதாகவும் கூறினர்.

இந்நிலையில், இதைக் கருத்தில் கொண்டு டிஜிசிஏ-வில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரம் சம்பந்தப்பட்ட விமான விதிகளின் கீழ் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. குஜராத்தில் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.