இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.. FBI அதிரடி ரிப்போர்ட்..!

உலகளவில் சைபர் அட்டாக், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் பணக்கார்கள், பெரும் நிறுவனங்கள் முதல் இளம் பட்டதாரிகள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட், ரேசர்பே போன்ற முன்னணி நிறுவனங்களைச் சைபர் அட்டாக், ஹேக்கிங் மூலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகிலேயே அதிகச் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

ஜூன் மாதம் கெடு விதித்த சீனா-வின் கிரேட் வால் மோட்டார்ஸ்.. டீலா..? நோ டீலா..?

FBI அமைப்பு

FBI அமைப்பு

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) சமீபத்தில் உலகில் சைபர் கிரைம்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இப்பட்டியலில் உலகின் பல நாடுகள் இடம்பெற்று இருக்கும் வேளையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியிலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் இணைய மோசடிகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் ஆக ஃபிஷிங் (Phishing) விளங்குகிறது. FBI அமைப்பின் இணையக் குற்ற புகார் மையம் (IC3) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

18.7 பில்லியன் டாலர் இழப்பு
 

18.7 பில்லியன் டாலர் இழப்பு

எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 மற்றும் 2021 க்கு இடையில், IC3 பெற்ற புகார்கள் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 18.7 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இழந்துள்ளனர். மேலும் எப்பிஐ மொத்தம் 2,760,044 புகார்களைப் பெற்றுள்ளது.

முதியவர்கள்

முதியவர்கள்

மேலும் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் தான். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2021ல் மட்டும் 1.68 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர், இதேபோல் 50-59 வயதுடையவர்கள் சுமார் 1.26 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். இதேவேளையில் 20 வயதில் இருப்பவர்கள் வெறும் 101.4 மில்லியன் டாலர் மட்டுமே இழந்துள்ளதாகத் தெரிகிறது.

டாப் 20 நாடுகள்

டாப் 20 நாடுகள்

இப்பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, கிரீஸ், சீனா, ஸ்பெயின், பாகிஸ்தான், இத்தாலி, மலேசியா, துருக்கி, ஜப்பான், ஆகிய 20 நாடுகள் இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India facing more Cybercrimes than australia; Check latest FBI report

India facing more Cybercrimes than Australia; Check latest FBI report இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.. FBI அதிரடி ரிப்போர்ட்..!

Story first published: Monday, May 30, 2022, 20:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.