உக்ரைனுக்கு ஏவுகணை வழங்க மாட்டோம்: ரஷ்ய எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!


ரஷ்ய எல்லைகளை தாக்கும் வல்லமை கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய போர் நடவடிக்கையானது தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலையில், டான்பாஸின் பெரும்பாலான நகரங்களை உக்ரைன் இழக்க தொடங்கி வருகிறது.

அத்துடன் 1,00,000 மக்கள்தொகையை கொண்ட நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் தங்களது பீரங்கி மற்றும் ஏவுகணை குண்டுகளால் தாக்கி வருவதற்கு மத்தியில், உக்ரைனின் முழு முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் நகரத்தின் மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புகொண்டார்.

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்க மாட்டோம்: ரஷ்ய எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!

மேலும் எங்கள் நகரங்களை பாதுகாக்க கூடுதல் அதிநவீன ஆயுதங்கள் வேண்டும் என என கோரிக்கையும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக் கிழமை உலக நாடுகளுக்கு முன்வைத்தார்.

இதையடுத்து, ரஷ்யா வெளியிட்ட செய்தி குறிப்பில் ரஷ்யாவின் எல்லைகளுக்கு எதிராக எதேனும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில், திங்கள்கிழமை வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவிற்குள் சென்று தாக்ககூடிய ஏவுகணை அமைப்புகளை நாங்கள் உக்ரைனுக்கு அனுப்பப் போவதில்லை என தெரிவித்தார்.

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்க மாட்டோம்: ரஷ்ய எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!

கூடுதல் செய்திகளுக்கு: போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும்: இளம் டோரி எம்.பி பகிரங்க அழைப்பு!

இதனைத் தொடர்ந்து மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்த கருத்தில், உக்ரைனுக்கு அமெரிக்கா MLRS ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளது, ஆனால் அவற்றில் நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் எதுவும் பட்டியலில் இல்லை என தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.