‘தமிழாற்றுப் படையுடன் சீமான் மகன் மாவீரன் வீடியோ’: நெகிழ்ந்த வைரமுத்து

Vairamuthu praises Seeman’s son for reading Thamizhattruppadai book: தனது தமிழாற்றுப்படை நூலை படிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகனை பாராட்டி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் மிக முக்கியமானர் கவிப்பேரரசு வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 7 முறை சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். திரைப்பாட பாடல்களோடு, கவிதை, கதை போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை வெளியிட்டார் கவிப்பேரரசு. தமிழின் மூவாயிரம் ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் பலரிடம் பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்த ரஜினிகாந்த், தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு 100 மடங்கு அதிகரித்துள்ளது எனப் புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையும் படியுங்கள்: சிவாஜி தி பாஸ் மாதிரி ட்ரை பண்ணியிருக்கார்… லெஜெண்ட் ட்ரைலர் ரிலீஸ்

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த வைரமுத்து, சீமானின் மகனைப் பாரட்டி கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

”காளிமுத்து பேரன் செந்தமிழன் சீமானின் திருச்செல்வன் மாவீரன் தமிழாற்றுப்படையோடு உறவாடி விளையாடும் ஒளிப்படங்கள் கண்டேன்

நாளையொரு பூமலர நல்லதமிழ்த் தேன்சிதற வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம் என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டேன்

தமிழாற்றுப்படையோடும் தமிழர் படையோடும் வா மகனே!” எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.