மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மதுரை:
துரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தற்போது தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என காலவரையில்லா வேலை நிறத்தப் போராட்டத்தில் 6000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.