முடியுமான அனைத்து பகுதிகளிலும் பயிரிடவும் – அரச ஊழியர்களுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தல்

முடியுமான அனைத்து பகுதிகளிலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர் நோக்கவுள்ள உணவு நெருக்கடிக்கு முகம்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிகையில்.. “எங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இந்நாட்டில்  பயிரிட முடியுமான அனைத்து இடங்களிலும் எதையேனும் பயிரிடும் பணியை அணுகுவதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  இருக்கும் காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு அனைத்து அரச ஊழியர்களிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளேன். தமக்கு கிடைக்கின்ற நேரத்தை  வீணடிக்காமல், உங்கள் வீட்டு முற்றத்தில் ஏதாவது பயிரிட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.  அதேபோல், அதிகளவிலான தனியார் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் இருக்கின்றன. அவற்றை தற்காலிகமாக எடுத்து பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளுங்கள். எனவே, நாடு முழுவதும் பயிர்ச்செய்கையை செயல்படுத்தவும், உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.  அதற்காக நாங்கள் முழு அர்ப்பணிப்பை மேற்கொள்வோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.