Metaverse Rape: தொடாமல் இப்படி செய்ய முடியுமா; மெட்டாவெர்ஸில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

Metaverse
Rape: டெக் துறை அதீத வளர்ச்சி கண்டு வரும் வேளையில்,
மெட்டாவெர்ஸ்
தொழில்நுட்பம் அதனை ஒரு படி மேலே இழுத்துச் சென்றுள்ளது. தற்போது, இந்த மெய்நிகர் உலகில் 21 வயதே ஆன பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எனும் தனிமனிதனின் கனவுத் திட்டமாக மெட்டாவெர்ஸ் பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய அனுபவத்தை வழங்கும் இந்த மெய்நிகர் உலகில் தொடர்ந்து பல சம்பவங்களும் அரங்கேறுகிறது.

உண்மையான மெய்நிகர் உலக அனுபவத்தை வழங்க “
Horizon Worlds
” எனும் கேம் மெட்டாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், மெட்டாவெர்ஸ் குறித்த கவலைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

மெய்நிகர் “பாலியல் வன்கொடுமை” சாத்தியமா?

பாதிக்கப்பட்ட 21 வயது பெண், மெட்டாவின் மெட்டாவெர்ஸ் கேம் “ஹரைசன் வேர்ல்ட்” இல் பெண் அவதாரை உருவாக்கினார். “மெட்டாவெர்ஸ்” அனுபவத்தின் மூலம் அது தொடர்புடைய ஆராய்ச்சியை முடிக்க அவர் விரும்பினார்.

ஒரு மணி நேரத்திற்குள், அவர் ஒரு ஆண் அவதாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதே சமயம் மற்றொரு ஆண் பார்வையாளர் பாதிக்கப்பட்ட பெண்னின் அவதார் பக்கத்தில் நின்று கொண்டு கூச்சலிட்டார்.

Indian Dating Apps: உங்கள் துணையை தேட உதவும் உண்மையான ஆப்ஸ்!
இதில் என்ன ஆச்சரியம் என்றால், அனைத்தும் ஒரு குழு நடத்திய பரிசோதனையின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. இது பெருநிறுவனங்களின் வளர்ந்து வரும் சக்தியைக் கணக்கிட முயற்சித்த ஒரு லாப நோக்கமற்ற செயலாகும்.

இந்த மாத தொடக்கத்தில், லாப நோக்கற்ற ஒரு நிறுவனம் அந்த பெண்ணை மெய்நிகர் உலகிற்கு அனுப்பியது. பிளாட்ஃபார்மைப் பயன்படுத்திய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர் மெய்நிகர் உலகமான மெட்டாவெர்ஸில் உருவாக்கிய அவதார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.