காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே முக்கியமாக இருந்தது – பிரதமர் மோடி தாக்கு

இடா நகர்: 
சிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10 கோடி விவசாயிகளுக்கு இன்று மொத்தம் 21,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சிம்லாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிம்லா எனது கர்ம பூமி. பல வீர, தீர தியாகங்களைக் கெண்டது சிம்லா. இங்குள்ள மக்கள் என்மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டும்.
கடந்த 2014-ல் நாடு முழுவதும் ஊழலும், கொள்ளையும் பெருகி இருந்தது. இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றனர். ஆனால் தற்போது இது தடுக்கப்பபட்டு நாடு வளர்ச்சி நோக்கிச் செல்கிறது. நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் முக்கிய செய்தியாக இடம்பெறுகிறது.
கடந்த ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்தினர். நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுகிறோம்.
நமது எல்லையில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பு மிகச் சிறப்பாக உள்ளது. ஆதார், ஜன்தன் பணி சிறப்பாக முடித்துள்ளோம்.
நாட்டின் வளர்ச்சியே நமது அரசின் முக்கிய நோக்கம். ஆட்சியும், சேவையும் எங்களுக்கு சமமானது. ஏழைகள் முன்னேற்றத்திற்கான அரசு எங்கள் அரசு என குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.