தென்கொரியா உடனான போட்டி டிரா – ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா தகுதிபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஜகார்த்தா:
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.
இதில், இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.
ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.