குரங்கு அம்மைக்கும் வருகிறது தடுப்பூசி!

கொரோனா பரவலை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குறிப்பாக, இங்கிலாந்தில் மட்டும் 70 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதிதாக நோய் தொற்று ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அதேசமயம் நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் WHO அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிப் பாடபுத்தகத்தில் ஆபாச படங்கள்… அரசின் மீது பொதுமக்கள் ஆத்திரம்!

அத்துடன், குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு , பெரிய அம்மை தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு, ஆபத்து குறையும்.

இதனிடையே, குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.