ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் அபராதம்… ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்…

ரயிலில் பயணம் செய்யும் போது அதிக லக்கேஜ் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த விளம்பரம் குறித்து மேற்கொண்ட விசாரணையில் லக்கேஜ் விதிகளில் ரயில்வே நிர்வாகம் புதிய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் முறையே 40 கிலோ மற்றும் 35 கிலோ வரையிலான லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம் அதற்கு மேல் கொண்டு செல்லும் லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும், இருந்தபோதும் ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகள் அதிகபட்சமாக 80 கிலோ மற்றும் 70 கிலோ வரை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

வ.எண்.  வகுப்பு   இலவச லக்கேஜ் அளவு   அனுமதிக்கப்பட்ட கூடுதல் அளவு  இலவசத்துடன் சேர்த்து அதிகப்படியாக அனுமதிக்கப்பட்ட அளவு  
1 ஏ.சி. பர்ஸ்ட் கிளாஸ் 70 Kg 15 Kg 150 Kg
2 ஏ சி 2 டயர் / முதல் வகுப்பு 50 Kg 10 Kg 100 Kg
3 ஏ.சி. 3 டயர் / ஏ.சி. சேர் கார் 40 Kg 10 Kg 40 Kg
4 ஸ்லீப்பர் கிளாஸ் 40 Kg 10 Kg 80 Kg
5 இரண்டாம் வகுப்பு 35 Kg 10 Kg 70 Kg

 

40 கிலோ கூடுதல் சுமையுடன் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்க ரூ. 109 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், கட்டணம் செலுத்த தவறும் பயணிகளுக்கு ஆறு மடங்கு அதிகமாக 654 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

லக்கேஜ் கட்டணத்தை டிக்கெட் முன்பதிவு செய்யும் போதோ அல்லது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்னதாக ரயில் நிலயத்திலோ செலுத்தலாம் என்று அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், கூடுதல் சுமை உங்கள் பயண இன்பத்தை குறைத்து விடும் என்று விளம்பரம் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.