ரஷ்யாவிற்கு எதிராக…பயங்கர ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் மால்டோவா


மேற்கத்திய நாடுகளிடம் இருந்து கொடிய ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக மால்டோவா நாட்டின் பிரதமர் நடாலியா கவ்ரிலிடா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில், அணிச்சேரா கொள்கையில் இருந்த நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு எதிராக...பயங்கர ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் மால்டோவாREUTERS

இந்தநிலையில், ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான மால்டோவாவும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியை நாடயுள்ளனர்.

இதுகுறித்து மால்டோவாவின் பொது தொலைகாட்சியில் பேசிய நாட்டு பிரதமர் நடாலியா கவ்ரிலிடா, மேற்கத்திய நட்பு நாடுகளிடம் இருந்து பாதுகாப்பிற்கு தேவையான பயங்கர ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மால்டோவாவிற்கு பயங்கர ஆயுதங்கள் நிச்சயமாக தேவைப்படுமா அல்லது தேவைப்படாத என்ற கோணத்தில் விவாதம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக...பயங்கர ஆயுதங்களை வாங்கி குவிக்க தயாராகும் மால்டோவா

கூடுதல் செய்திகளுக்கு: பிளாட்டினம் விழாவில் அசெளகரியங்களை உணர்ந்ததால்…நன்றி விழாவை புறகணிக்கும் பிரித்தானிய ராணி

மால்டோவா பிரதமரின் அறிவிப்பிற்கு முன்னதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் Telegraph பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பிரித்தானியா மற்றும் நோட்டோ படைகள் மால்டோவாவிற்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக விவாதித்து வருவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.