30 நிமிஷத்துல 617 கலோரிகள் எரிக்கணுமா? இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தாலே போதும்


உடலில் உள்ள அதிகப்படியான தசைகளைக் குறைத்து உடலைக் கட்டுப்போக்காக வைத்துக் கொள்ள ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது 30 நிமிஷத்துல 617 கலோரிகள் எரிக்ககூடிய சில உடற்பயிற்சிகள் என்ன என்பதை பார்ப்போம்.

​வெர்ட்டிக்கிள் க்ளிம்பர் உடற்பயிற்சி

​வெர்ட்டிக்கிள் க்ளிம்பர் உடற்பயிற்சிஇந்த உடற்பயிற்சியை தொடர்ந்து 30 நிமிடங்கள் செய்து வந்தால் ஆண்களுக்கு கிட்டதட்ட 617 கலோரிகளும் பெண்களுக்கு 389 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வெர்ட்டிக்கிள் க்ளிம்பர் பயிற்சியின் சிறப்பே ஒரே பயிற்சிக்குள் கார்டியோ மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடிவது தான். செங்குத்தாக ஏறுதல், குளுட்டுகள், குவாட்ஸ், முதுகு, மார்பு நீட்சி ஆகியவற்றைச் செய்வதால் முழு உடலும் வேலை செய்கிறது.

​சைக்கிளிங் பயிற்சி

30 நிமிஷத்துல 617 கலோரிகள் எரிக்கணுமா? இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தாலே போதும்

சைக்கிளிங் செய்வதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதோடு உடல் எடையையும் வேகமாகக் குறைக்க முடியும்.

ஒரே இடத்தில் இருந்தபடி செய்யும் இந்த பயிற்சியின் மூலம் ஆண்கள் கிட்டதட்ட 451 கலோரிகளும் பெண்கள் 285 கலோரிகளையும் எரிக்க முடியும்.

சைக்கிளிங் செய்யும்போது உடலின் கீழ்ப்பகுதி நன்கு இயங்கும். அதனால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். அதேசமயம் தோள்பட்டையும் வலுவடையும்.

ரன்னிங்

[7NQ3PU ]

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும்போது ஆண்களுக்க 365 கலோரியும் பெண்களுக்கு 222 கலோரிகளும் குறைக்க முடியும்.

இது நம்முடைய ஒட்டுமொத்த உடலையும் இயங்கச் செய்து, உடல் முழுவதும் உள்ள தேவையற்ற கலோரிகளான கொழுப்பை எரிக்கச் செய்கிறது.

​உடல் எடை பயிற்சிகள்

[I02XQW ]

உடல் எடையை முழுவதும் கடடுப்படுத்தும் பயிற்சி தான் இது. இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை செய்வதன் மூலம் ஆண்கள் 370 கலோரிகளும் பெண்கள் 229 கலோரிகள் எரிக்க முடியும்.

புஷ்-அப், புல்லிங், சிட்-அப்ஸ், புல் அப்ஸ் ஆகிய எல்லா பயிற்சிகளையும் செய்யும் போது உடலில் என்ன நடக்குமோ அது இந்த பயிற்சியிலேயே நடக்கும்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.