அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி குறித்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில், முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, சுவிட்சர்லாந்து வந்துள்ள உக்ரைன் அகதிகள் ஓராண்டுக்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கும் வகையில் இந்த ‘S’ permit என்னும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சில அசாதாரண சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்படவும் செய்யலாம்.

இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் அனுமதி தொடர்பிலான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அதனால், அந்த அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் சுவிஸ் புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, உக்ரைன் அகதிகள் மூன்று மாதங்களில் 15 நாட்களுக்குமேல் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைனுக்குச் சென்று தங்கினாலோ, அல்லது, இரண்டு மாதங்களுக்கு மேல் வெளிநாடு ஒன்றில் தங்கினாலோ, அவர்களுடைய ‘S’ permit என்னும் அனுமதியை அவர்கள் இழக்க நேரிடும்.

அதே நேரத்தில், இந்த விதிக்கு சில விதிவிலக்குகளும் உள்ளன.

உதாரணமாக, மொத்தமாக உக்ரைன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து உக்ரைன் சென்றாலோ அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு உறவினரைக் காணச் சென்றாலோ அவர்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
 

அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி குறித்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.