அரசின் தடையை சமாளிக்க புதிய யுக்தி: மீண்டும் வருகிறது 'டிக்டாக்'

டெல்லி : இந்தியாவிற்குள் மீண்டும் ‘டிக்டாக்’ செயலி நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘டிக்டாக்’ மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர்கள் ஏராளம். ஒரு காலத்தில் சராசரி நபர்களையும் சினிமா ஸ்டார் களைப்போல வளம் வர செய்த பெறுமை இந்த ‘டிக்டாக்’ சேரும். இன்று சின்ன துறை தொடங்கி சினிமா வரையில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஜொலித்துவரும் டிக்டாக் பிரபலங்கள் ஏராளம். இதனால் தன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை ஒன்றிய அரசு இந்தியாவில் தடை செய்த பொது தலையில் கைவைத்து வருந்தியவர்கள் ஏராளம். ஆனால் விடாமல் இன்ஸ்டா ரீல்ஸ் என வேற அப்சன்ஸ் தேடி தேடி மக்கள் பயன்படுத்த தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் ‘டிக்டாக்’ செயலி இந்தியாவிற்குள் நுழைய முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.டிக்டாக் பயனர்களை குஷிப்படுத்தி உள்ளது. தடை செய்ய பட்ட செயலிக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காத போதும் சத்தமே இல்லாமல் வேற வழியில் இந்தியாவிற்குள் நுழைய பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றதாம். 2020ம் ஆண்டு டிக்டாக் ஒன்றிய அரசு தடை செய்ததும் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனம் மனா பய் டல்ஸ் கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டது.இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இந்தியாவிற்குள்  ரி- என்ட்ரி குடுக்க விருப்பும் பய் டல்ஸ் நிறுவனம் அதற்காக இந்தியாவை சேர்ந்த Hiranandani நிறுவனத்தை நாடி உள்ளதை உள் நாட்டு நிறுவனத்துடன் இனைந்து நுழைவதன் மூலம் பயனர்கள் தகவல் அவ்நிறுவனதின் கீழே சேகரிக்க படும். இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என அந்நிறுவனம் எதிர் பார்க்கிறது. பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இது குறித்து 2 நிருபணமும் அதிகாரப்  பூர்வமாக எந்த தகவலையும் வெளியிட தயராக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.