கெஸ்ட்ரோல் தான் ஆனா பவர்ஃபுல்… விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்பு

Tamil Cinema Vikram Movie Surya Character Response : தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் விக்ரம். கடந்த 1986-ம் ஆண்டு வெளியான கமலின் விக்ரம் மற்றும் 2019ம் ஆண்டு வெளியான கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

இதில் விக்ரம் கேரக்டரில் கமல்ஹாசன் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமர் கேரக்டரில் பகத் பாசில், சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி என மும்மூர்த்திகள் என்று சொல்லும் அளவுக்கு போட்டி போட்டு நடித்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த 3 கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கைதி படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகர் நரேன் இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் காயத்ரி, மைனா நந்தினி, மற்றும் ஷிவானி ஆகிய மூவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகாரித்த நிலையில், படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டரல் நடித்துள்ள அனைத்து கேரக்டர் பெயர்களும் அறிவிக்கப்பட்டது ஆனால் சூர்யாவின் கேரக்டர் பெயர் மட்டும் வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருந்தனர். இதனால் சூர்யாவின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்று ரசிகர்க்ள அலசி ஆராயத்தொடங்கினர்.

இதில் கைதி படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் வரும் கேரக்டரை இதில் கெஸ்ட்ரோலாக இருக்கும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு நேர்மாறாக விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் ரோலக்ஸ் என்று அவர் படத்தின் க்ளைமேக்ஸில் சில நிமிடங்கள் வருவார் என்று கூறப்பட்டது.

இதனால் கமல் ரசிகர்கள் போல் சூர்யா ரசிகர்களுக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கதொடங்கிய நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் படம் இன்று வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், பாசிட்டீவான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதேபோல் கமல், பாசில் சேதுபதி, நரேன் என அனைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சொன்னபடியே ரோலக்ஸ் என்ற கேரக்டரில் படத்தின் க்ளைமேக்ஸில் என்ட்ரி கொடுக்கும் சூர்யா அனைவரையும் கவரும் வகையில் நடித்துள்ளார். 30 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் நடித்து வரும் சூர்யா முதல்முறையாக இந்த படத்தில் நெகடீவ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சில நிமிடங்கள் வந்தாலும் சூர்ய ஒரு யூகிக்க முடியாத கேரக்டர் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதில் விக்ரம் படத்திற்கு நெகடீவ் விமர்சனம் கொடுத்துள்ள ரசிகர் ஒருவது, எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை ஆனால் பாசிட்டீவ் விமர்சனம் எப்படி வருகினறது என்று தெரியவில்லை இடைவேளை ட்விஸ்ட் படத்தின் முதல் பாதியை கடத்தி சென்றுள்ளது.

சூர்யாவும் கைதியும் படத்தின் 2-வது பாதியை காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பாசிட்டீவ் விமர்சனர்தில் இடம்பெற்றதை விட நெகடீவ் விமர்சனத்தில் கெஸ்டாக வந்த ஒரு கேரக்டர் பற்றி சொல்வது இந்த கேரக்டருக்கு கிடைத்த பெருமை என்று சொல்லாம். அந்த வகையில் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட ஒப்பனிங்க்கு சூர்யாவும் ஒருமுக்கிய காரணம்   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.