மீண்டும் பேருந்து பயணத்தில் த்ரில்லர் கதை -கவனம் பெறும் பிரபு சாலமனின் ‘செம்பி’ ட்ரெய்லர்

பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செம்பி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் செல்வராகவன் இன்று வெளியிட்டுள்ளார்.

‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘கும்கி’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்து பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டு வருகிறார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 1985-ம் ஆண்டு மாடல் கொண்ட பழையப் பேருந்து ஒன்று இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

image

மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.