சொகுசு பங்களாவில் இளம்பெண்ணுடன் ஜாலி குஜராத்தில் மாஜி அமைச்சரை அடித்து நொறுக்கிய மனைவி: வைரலாகும் வீடியோ

காந்தி நகர்: குஜராத் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான பரத்சிங் சோலங்கி, சொகுசு பங்காளாவில் இளம்பெண்ணுடன் இருக்கும்போது, அவரது மனைவி கையும் களவுமாக பிடித்து அடித்து உதைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இக்கட்சியை சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி 4 முறை முதல்வராக இருந்தார். இவரது மகன் பரத்சிங் சோலங்கி, முன்னாள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். 2 முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், சொகுசு பங்களாவில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்போது அவரது மனைவி கையும் களவுமாக பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல், சிலருடன் பங்களாவுக்குள் நுழைகிறார். கதவை திறந்ததும், பரத்சிங் சோலங்கி டி-சர்ட் மற்றும் டிவுசருடன் வருகிறார். அவருக்கு பின்னால் ஒரு இளம்பெண் கையில் செல்போனை வைத்து கொண்டு நடமாடுகிறார். இதை பார்த்த அவரது மனைவி பரத்சிங் சோலங்கி டி-சர்ட்டை பிடித்து தர்ம அடி கொடுக்கிறார். பின்னர், பரத்சிங்கை தள்ளிவிட்டு, உள்ளே செல்லும் அவரது மனைவி அந்த இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து அடித்து உதைக்கிறார். அப்போது, பரத்சிங் சோலங்கி தடுக்க முயல்கிறார். அவரையும் அவரது மனைவி அடிக்கிறார். சுமார் 31 நொடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் குஜராத் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹர்திக் படேல் பாஜ.வுக்கு தாவிய நிலையில், இந்த வீடியோ விவகாரம் காங்கிரசுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.* அரசியலில் இருந்து ஓய்வு பரத்சிங் திடீர் அறிவிப்பு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பரத்சிங் சோலங்கி திடீரென தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார். அவர் கூறுகையில், ‘குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கிறேன். என் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன். அது விசாரணையில் உள்ளது. அதுவரை என் மனைவி குறித்து எதுவும் கூறமாட்டேன். காங்கிரசுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சில மாதங்களுக்கு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்’ என்று கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.