மனைவி அடித்து கொலை.. ரூ.5 லட்சம் 75 சவரன் பெற்ற சித்த வைத்தியர்.. நம்பிய மனைவியை நாடகமாடி கொன்றார்.!

5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 75 சவரன் நகையை பெற்றுக் கொண்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சித்தவைத்தியர் ஒருவர், ஒரே வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது.

வரதட்சணைக்கு கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட கேரளாவில் தான் இந்த வரதட்சணை கொலை அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம், ஆழப்புழா பகுதியை அடுத்த சேர்த்தலாவை சேர்ந்தவர் 50 வயது நாட்டு வைத்தியர் அப்புக்குட்டன் இவர் மேட்ரிமோனியல் மூலம் 41 வயதான ஹேனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஹேனா லேசாக குழந்தை தனமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர் என்பதால் திருமணத்தின் போது 75 சவரன் நகைகளும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 26 ந்தேதி தனது மனைவி ஹேனா குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி மருத்துவ மனைக்கு தூக்கிச்சென்றார் அப்புக்குட்டன். ஹேனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன் கூட்டியே பலியானதாக தெரிவித்தனர், இந்த நிலையில் ஹேனாவின் தலையில் சில காயங்கள் காணப்பட்டதால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் ஹேனாவின் தலையில் 13 காயங்களும், உடல் முழுவதும் 27 காயங்களும் இருந்ததும், வரதட்சணை கொடுமையால் ஹேனா கொடூரமாக கொலை செய்யப்பட்டது, அம்பலமானது.

திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிவதற்குள்ளாக அப்புக்குட்டன் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியதால் , செல்போன் மூலம் பெற்றோருக்கு தனது கணவர் அடிப்பதாக ஹேனா தகவல் தெரிவித்து உள்ளார்.

பெற்றோர் முன்னிலையில் ஹேனாவிடம் அன்பை பொழிவது போல நடித்ததால் அதனை உண்மை என்று நம்பிய குழந்தை குணம் கொண்ட ஹேனா , பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்தும் செல்ல மறுத்து கணவருடனே இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஹேனாவுடன் வாக்குவாதம் செய்து அவரது தலையை பிடித்து தரையில் வைத்து பலமுறை சரமாரியாக அடித்து கொலை செய்த அப்புக்குட்டன் அதனை மறைப்பதற்காக தனது மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்ரவதை வைத்தியரான அப்புக்குட்டனை கைது செய்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.