மாஸ் காட்டும் காடுவெட்டி பட டீசர்.! யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம்.! 

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் காடுவெட்டி. 

இந்தத் திரைப்படம் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காடுவெட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், காடுவெட்டி படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சற்றுமுன் வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் காடுவெட்டி படத்தின் டீசர் இரண்டாம் இடம் பிடித்து அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.