வீட்டு கடனுக்கு எந்த வங்கியில் குறைவான வட்டி தெரியுமா..?

இந்திய ரியல் எஸ்டேட், கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வு என்பது புதிய வீட்டை வாங்க திட்டமிடுவோருக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

வட்டி விகித உயர்வால் ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் வேகம் பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் எந்த வங்கி குறைவான வட்டியில் ஹோம் லோன் கொடுகிறது என்பது எப்போது தெரிந்துகொள்வோம்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கழுவி ஊற்றிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. என்ன காரணம்..?

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

பொதுவாக வங்கிகள் கடன் வாங்குபவரின் சிபில் மற்றும் ஆபத்து விவரம், பாலினம் மற்றும் பழைய கடனின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு விண்ணப்பதாரர்-க்கும் விட்டி விகிதம் மாறுபடும், அதேபோல் இவையும் வங்கிக்கு வங்கியும் மாறுபடும்.

முக்கிய வங்கிகள்

முக்கிய வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு அளிக்கப்படும் குறைவான வட்டி விகிதங்களை இப்போது பார்ப்போம்.

ஹெச்டிஎப்சி
 

ஹெச்டிஎப்சி

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி 7.15-8.05 வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. ஆனால் இந்த வட்டி விகிதம் ஏற்கனவே கூறியது போல் CIBIL மதிப்பெண், பாலினம் மற்றும் கடனின் அளவு போன்றவற்றைப் பொருத்து மாறும்.

CIBIL மதிப்பெண்

CIBIL மதிப்பெண்

உங்களிடம் சிறந்த CIBIL மதிப்பெண் இருந்தால், குறைந்த மதிப்பெண்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள். மேலும், கடன் தொகை அதிகமாக இருந்தால், வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன்களுக்கு 7-7.6 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது பாலினம் தவிரச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறாதவர்களைப் பொறுத்து 6.9-8.6 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி

தனியார் துறை கடனாளியான கோடக் மஹிந்திரா வங்கி வீட்டுக் கடன்களுக்கு 6.55-7.6 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் தவிர, கடன் வழங்குபவர் ஜிஎஸ்டி மற்றும் செயலாக்கக் கட்டணங்களையும் வசூலிக்கிறார், இது சுமார் 0.5 சதவீதமாக இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cheapest Home Loan Interest Rate : HDFC, SBI, Kotak, Union Bank

Cheapest Home Loan Interest Rate : HDFC, SBI, Kotak, Union Bank வீட்டு கடனுக்கு எந்த வங்கியில் குறைவான வட்டி தெரியுமா..?

Story first published: Saturday, June 4, 2022, 20:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.