இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து மகிழ்ந்திட தனி கூட்டமே உள்ளது. பலரும், ஜாலி ரீல்ஸ்களின் லிங்க்களை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஷெர் செய்வது வழக்கம். அதே சமயம், அவற்றில் மிகவும் பிடித்தமான வீடியோவை மொபைலில் சேமித்து வைக்கலாம் என யோசித்து, டவுன்லோடு செய்ய முடிவு செய்வோம்.

ஆண்ட்ராய்டு பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் வீடியோஸ் டவுன்லோடு செய்திட பல செயலிகள் உள்ளன. அதில் நீங்கள் இன்ஸ்டா கணக்கை லாகின் செய்து, வீடியோவை டவுன்லோடு செய்யலாம். இது மூன்றாம் தரப்பு செயலி என்பதாலும், லாகின் விவரங்களை கோருவதாலும், அதனை பதிவிறக்க சிலருக்கு தயக்கம் இருக்கிறது. அவர்கள், iGram வெப்சைட் மூலம் எளிதாக வீடியோக்களை டவுன்லோடு செய்யலாம். இதற்கு, நீங்கள் லாகின் விவரங்களை கொடுக்க வேண்டாம். எக்ஸ்ட்ராவாக, செல்போனில் செயலியை இன்ஸ்டால் செய்யவும் வேண்டும்.

iGram-ல் இன்ஸ்டா வீடியோ டவுன்லோடு செய்யும் முறை

Step 1: Get the link of the Reel you want to download

நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீல்ஸின் லிங்க்கை காப்பி செய்ய வேண்டும். அதற்கு, ரீல்ஸ் வீடியோவில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதனை, கீழே வலதுப்புறத்தில் காணலாம். நீங்கள் மெனுவை கிளிக் செய்ததும், அதில் பல விதமான ஆப்ஷன்கள் தோன்றக்கூடும். அதில், ‘Copy link’ கிளிக் செய்யுங்கள்.

Step 2: Go to iGram and paste your link

அடுத்ததாக, ஆன்லைனில் iGram வெப்சைட்-க்கு செல்ல வேண்டும். அங்கு, லிங்க் பதிவிடும் இடத்தை கண்டறிந்து paste செய்திட வேண்டும். iGram வெப்சைட், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வோர்க் செய்திடும்.

Step 3: Download your video

நீங்கள் லிங்க் பேஸ்ட் செய்துவிட்டு, அருகிலிருக்கு download பட்டன் கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக, அந்த ரீல்ஸ் வீடியோவை திரையில் காணமுடியும். அதன் கீழே, ‘Download mp4’ பட்டன் தோன்றும். அதனை கிளிக் செய்தால், வீடியோ டவுன்லோடு ஆக தொடங்கிடும்.

டவுன்லோடு செய்ய ரீல்ஸ் வீடியோ, மொபைல் கேலரியில் காணலாம். அதனை, வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.