புலிகள் காப்பகத்தில் உள்ள ஹோட்டல்களை மூட உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தின் புக்சா புலிகள் காப்பகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஹோட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கிழக்கு மண்டல அமர்வு உத்தரவிட்டுஉள்ளது.

latest tamil news

37 வன கிராமங்கள்மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் வடக்கே உள்ள புக்சாவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.இந்த வனப்பகுதியில் உள்ள, 37 வன கிராமங்கள், வருவாய் கிராமங்களாக மாற்றப்பட்டன.

இந்த கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஹோட்டல்கள், உணவு விடுதி கள், தங்குமிடங்கள் உள்ளன. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கிழக்கு மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்த அமர்வு, இந்த ஹோட்டல்களை மூட, 2017ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மாநில சுற்றுலாத் துறை சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதிக்கு உட்பட்ட வன கிராமங்களை, வருவாய் கிராமங்களாக அறிவித்தது தவறு. சட்டத்தின்படி மாற்ற அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், அங்கு வர்த்தக ரீதியில் கட்டடங்கள் இயங்க அனுமதிக்க முடியாது.

latest tamil news

உணவு விடுதி


அதனால், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து அரசு ஹோட்டல்கள், உணவு விடுதிகளை, இரண்டு மாதங்களுக்குள் பயிற்சி மையங்களாக மாற்ற வேண்டும்.இல்லாவிட்டால், அவற்றை மாவட்ட கலெக்டர் இடித்து தள்ள வேண்டும். அதேபோல், இந்த வனப்பகுதியில் உள்ள, 69 தனியார் ஹோட்டல்கள், உணவு விடுதிகளும் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.