IIFA 2022: சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; சிறந்த படம் `சர்தார் உதம்'! | Winners Complete list

அபுதாபியில் கோலாகலமாக இரண்டு நாள்கள் நடந்த IIFA Rocks 2022 விருதுகள் விழாவைத் தொகுத்து வழங்கியது சல்மான் கான். அந்த விழாவில் யாருக்கு என்னென்ன விருதுகள் கொடுக்கப்பட்டன என்கிற முழுமையான பட்டியல் இதோ.

சிறந்த நடிகர் – விக்கி கௌசல் (‘Sardar Udham’ படத்திற்கு). மொத்தம் மூன்று விருதுகள் இந்தப் படத்திற்குச் சென்றிருக்கின்றன.

சிறந்த நடிகை – கீர்த்தி சனோன். ‘Mimi’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது.

சிறந்த இயக்குநர் – விஷ்ணுவர்தன். ‘Shershaah’ படத்தை இயக்கியதற்காக.

சிறந்த படம் – ‘Shershaah’. 25 வயதான இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் தீரமான வாழ்க்கைத் தழுவி எடுக்கப்பட்ட கதை ஷெர்ஷா. ஆகஸ்ட் 15, 2021-ல் படம் வெளியானது.

சிறந்த பாடகி – அஸீஸ் கவுர் (Asees Kaur) ‘ஷெர்ஷா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘Raataan Lambiyan’ பாடலுக்காக.

சிறந்த பாடகர் – ஜூபின் நாடியல் (Jubin Nautiyal). அதே ‘Raataan Lambiyan’ பாடலுக்காகத்தான் இவருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.

சிறந்த பாடல் – கவுசர் முனிர் (Kausar Munir) ’83’ படத்தில் இடம்பெற்ற ‘Lehra Do’ என்ற பாடலை எழுதியதற்காக இவருக்கு இந்த விருது.

சிறந்த இசையமைப்பு – ஏ.ஆர்.ரஹ்மான் ‘Atrangi Re’ படத்திற்காகவும், Jasleen Royal, Javed-Mohsin, Vikram Montrose, B Praak, Jaani ஆகியோர் ‘ஷெர்ஷா’ படத்திற்காகவும் விருதுகள் பெற்றனர்.

சிறந்த அறிமுக நடிகர் – Ahan Shetty. ‘RX 100’ என்ற தெலுங்கு படத்தின் ரீ-மேக் ஆக உருவாகிய ‘Tadap’ இந்திப் படத்தில் நடித்ததற்காக.

சிறந்த அறிமுக நடிகை – Sharvari Wagh. ‘Bunty Aur Babli 2’ படத்திற்காக.

சிறந்த தழுவல் கதை – ’83’ படத்தின் கதைக்காக Kabir Khan, Sanjay Puran Singh Chauhan இருவருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த கதை – அனுராக் பாசு (‘Ludo’ படத்திற்காக)

சிறந்த துணை நடிகைக்கான விருது – Sai Tamhankar (‘மிமி’ படத்திற்காக)

சிறந்த துணை நடிகருக்கான விருது – பங்கஜ் திரிபாதி (Ludo படத்திற்காக)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.