WhatsApp Update: வந்தது புதிய வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சம்!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தளம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு சோதனை முயற்சியாக விரைவில் வழங்கப்படும். இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும்போது, வாட்ஸ்அப் செயலிக்கு கூடுதல் அரண்கள் கொடுக்கப்படும். பல மோசடிகளைத் தடுக்க இது உதவியாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

இந்த குறியீடானது ஒரு மொபைலில் இருந்து கணக்கை வேறு போனில் அணுக முற்பட்டால் அவசியமாகத் தேவைப்படும். அதாவது, நம் அனுமதி இல்லாமல், வேறு யாரேனும் நம் கணக்கை பயன்படுத்த முயற்சித்தால் இந்த குறியீடு கேட்கப்படும்.

மேலும் படிக்க | Elon Musk Twitter: என்ன ஆகப்போகிறது எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தம்!

நிறுவனம் வாட்ஸ்அப் தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு ஒவ்வொரு பதிப்பும் புதிப்பிக்கப்படுகிறது. இதில் பல அம்சங்களை அண்மை காலமாக பயனர்கள் அனுபவித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் எடிட் டெக்ஸ்ட்

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, செய்தி எதிர்வினை எமோஜிகளை அம்சத்தை அறிமுகம் செய்த பிறகு, வாட்ஸ்அப் இப்போது அனுப்பிய செய்திகளைத் திருத்துவதற்கான அம்சத்தினை சோதனை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Useful Apps: இந்தியர்கள் இந்த 5 செயலிகளை வைத்திருப்பது அவசியம்!

இது வரவிருக்கும் புதிய அப்டேட் மூலம் கொண்டுவரப்படலாம் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ இது தொடர்பான ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. முதலில் இந்த அம்சம் iOS வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும் என்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் குவிக் ரிப்ளே எமோஜி

செய்திகளுக்கு விரைவான எமோஜி ரிப்ளே கொடுக்கும் அம்சத்தை நிறுவனம் சமீபத்திய அப்டேட்டில் பயனர்களுக்கு வழங்கியது. அதிலும் புதிய அம்சத்தை மெட்டா WhatsApp பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

அதாவது, பிற அரட்டைகளில் பயன்படுத்தும் பல நிற எமோஜிகளை போன்று குவிக் ரிப்ளே எமோஜிகளும் பல வண்ணங்களில் விரைவில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

அதேபோல, வாட்ஸ்அப் ஸ்டேடஸில் புதிய அப்டேட் வரவுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, இணைப்பு முன்னோட்டம் இப்போது ஸ்டேடஸிலும் தோன்றும். தற்போது, ஸ்டேட்டஸில் ஏதேனும் URL அல்லது இணைப்பைப் பகிரும்போது, அந்த இணைப்பை மட்டுமே நாம் பார்க்க முடியும்.

புதிய அப்டேட் மூலம் லிங்க் தகவல்களை கூடுதலாக பார்க்க முடியும். இந்த லிங்க் முன்னோட்டம் பயனர்களுக்கு அது தேவையானதா, இல்லை தவிர்க்க வேண்டியதா என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.