இந்திய சந்தையில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி82 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் செக்மென்ட்டில் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த செக்மென்டில் வெளியாகி உள்ள லைட் வெயிட் மற்றும் ஸ்லிம்மான போன் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இந்த போன் மிட்-ரேன்ஜ் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை கொடுக்கும் என தெரிகிறது.

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

  • 6.6 இன்ச் pOLED டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். இதன் ரெஃப்ரஷ் ரேட் 120Hz.
  • OIS சப்போர்ட் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா. 8 மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • ஸ்னாப்டிராகன் 695 SoC புராசஸரை கொண்டுள்ளது இந்த போன்.
  • 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம். 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது இந்த போன்.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம். 5000 mAh பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. 5ஜி இணைப்பு வசதி.
  • 6ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.21,499 மற்றும் 8ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.22,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.