Lenovo Tab: சக்திவாய்ந்த 10,200mAh பேட்டரியுடன் வெளியான லெனோவா டேப்லெட்!

Lenovo Tab P12 Pro: லெனோவா தனது புதிய டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் லெனோவா டேப் பி12 ப்ரோ ஆண்ட்ராய்டு 13 பீட்டா பதிப்பை பெறுகிறது.

புதிய லெனோவா டேப்லெட் 12.6 இன்ச் டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ் சவுண்ட், சக்திவாய்ந்த 10,200mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த சிறந்த டேப்லெட்டின் விலை ரூ.69,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CERT-In Alert: பிரவுசர் பாதுகாப்பு கேள்விக்குறி? குரோம், ஃபயர்பாக்ஸ் உலாவிகளுக்கு ஆபத்து!

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவிலிருந்து இந்த டேப்லெட்டை வாங்கலாம். இந்த டேப் சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. லெனோவா டேப் பி12 ப்ரோவின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

லெனோவா டேப் பி12 ப்ரோ அம்சங்கள் (Lenovo Tab P12 Pro Specifications)

லெனோவா டேப் பி12 ப்ரோ ஆனது 2560×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 12.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மெலிதான பெசல்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது.

Nothing Phone 1: போன்களின் புதிய நாயகன் நத்திங் போன் 1 அவதாரம் ஜூலை 12 முதல்…!

இந்த டேப்லெட் கணினி முழுவதும் மெட்டலால் கட்டமைக்கப்பட்டுள்ளது. டேப் 8 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256 GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை 1TB வரை நீட்டிக்கலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 புராசஸர் இதில் நிறுவப்பட்டுள்ளது.

லெனோவா டேப் பி12 ப்ரோ கேமரா (Lenovo Tab P12 Pro Camera)

இந்த லெனோவா டேப்பில் புகைப்படம் எடுப்பதற்காக பின் பேனலில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இதில் 13 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டால்பி விஷன் ஆதரவுடன் வரும் இந்த டேப் சக்திவாய்ந்த 10,200 mAh பேட்டரியுடன் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறது. பேட்டரி முழு சார்ஜில் 15 மணிநேர ஆன்லைன் வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

இந்த டேப் 565 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. இதற்கிடையில், சக்திவாய்ந்த அம்சங்களுடன் கூடிய பிரீமியம் டேப்பை சற்று அதிக விலையில் வாங்க விரும்பினால், Lenovo Tab P12 Pro ஒரு சிறந்த தேர்வாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.