சர்வதேச நாணய நிதியத்துடன் இம்மாதம் நிறைவடைவதற்கு முன்னர் இணக்கப்பாடு -பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாத்தினர் மட்டத்திலான உடன்பாடு இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் எட்டப்படலாமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது இதுதொடர்பாக பிரதமர் தெரிவிக்கையில் நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 20ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக  கூறினார்.

எதிர் நோக்கப்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் ஆரம்பிக்கப்போவதாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவு வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய உண்மையான நிலையை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஊடக நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பின், பிரதிபலனை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது. எனினும், நிவாரணங்களின் ஊடாக இந்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது.

200 பில்லியன் ரூபா பெறுமதியான நிதி பாதுகாப்பு கட்டமைப்பு தயாரிக்கப்படுகிறது. ஜப்பானின் நம்பிக்கையினை மீண்டும் கட்டியெழுப்பி அவர்களின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன. எனினும்இ எரிபொருளை இலவசமாக வழங்குவதற்கு எந்தவொரு நாடும் முன்வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.