ஆதீனங்கள் மடத்தை விட்டு வெளியே வந்து அரசியல் பேசுங்கள் – புதுச்சேரி நாராயணசாமி

புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது…
image
பிரதமர் மோடி ஆட்சியில் விலைவாசி அதிகரித்து இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளித்து வருகிறார்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கின்றனர். மாநில அரசு கூறியும் நீட் தேர்வு ரத்து செய்யாததால் மருத்துவக் கனவில் இருந்த 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் பணவீக்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் பொருளாதார வளர்த்தி 9 சதவீதத்தில் லிருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சி சாதனை ஏதும் செய்யவில்லை. ரேஷன் கடையில் இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் திட்டங்களை பாஜகவின் திட்டமாக காட்டி வருகின்றனர்.
மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஒரே திட்டத்தில் பாஜக இருக்கிறது. அது நீடிக்காது. அமலாகத்துறை, மற்றும் சிபிஐ வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக தோல்வியடையும்.
image
பாஜகவினரின் நபிகள் நாயகம் குறித்த பேச்சு இந்தியாவிற்கு மற்ற நாடுகள் மத்தியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை தினசரி அமைச்சர் மீது தெரிவித்து வருகிறார். புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரியின் சூப்பர் முதல்வராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். ரெங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார். 2000 கோடியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் செய்யவில்லை.
image
பெஸ்ட் மாநிலமாக இருந்த புதுச்சேரி வோர்ஸ்ட் மாநிலமாக மாறியுள்ளது. ஆதீனங்கள் அரசியல் பேசுவதென்றால் மடங்களை விட்டு வெளியில் வந்து பேசுங்கள். அதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை.
கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை அமைச்சர்கள் தடுக்க வேண்டியது அவர்களின் கடமை அதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்
பாஜக இந்தியாவில் மத அரசியலை செய்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நோக்கில் செயல்படுகிறது. பாபாசாகிப் அம்பேத்கர் கூறியது போல சமத்துவம் சகோதரத்துவத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.