இந்தியாவுக்கு சபாஷ் சொன்ன ஃபிட்ச்.. நெகட்டிவில் இருந்து ஸ்டேபிள்.. செம்ம அப்டேட்!

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான (IDR) கண்ணோட்டத்தை எதிர்மறை (negative) நிலையில் இருந்து, இயல்பு நிலை (stable) என ஃபிட்ச் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது,

இதனையடுத்து இந்த ஆய்வு நிறுவனம் அதன் ரேட்டிங்கினை BBB என மாற்றம் செய்துள்ளது.

இது இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் மீட்சி, நிதித்துறையில் உள்ள பலவீனங்கள் காரணமாகவும், உலகளாவிய பொருட்களின் அதிரடியான விலையேற்றத்தின் மத்தியிலும், உலகளவில் பல நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும், இந்தியா இயல்பான ஓரளவு வளர்ச்சி பாதையில் உள்ளது.

தந்தையின் 1 வருட சம்பளத்தில் டிக்கெட்.. இன்று கோடிகளில் வருமானம்.. தமிழக இளைஞர் சாதித்து எப்படி?

ஏன் திருத்தம்

ஏன் திருத்தம்

இதனால் இந்தியாவின் எதிர்மறையான அபாயங்கள் குறைவதால், மதிப்பீட்டு நிறுவனம் அதன் அவுட்லுக்கினை திருத்தம் செய்துள்ளது. ஆக கடன் அளவீடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நாங்கள் வலுவான வளர்ச்சியினை எதிர்பார்க்கிறோம் என மதிப்பீட்டு நிறுவனம் கூறியது.

வளர்ச்சி விகிதம் கணிப்பு

வளர்ச்சி விகிதம் கணிப்பு

இந்தியாவில் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியஆண்டில் 7.8% ஆக வலுவான வளர்ச்சியினை காணலாம் என ஃபிட்ச் கணித்துள்ளது. எவ்வாறயினும் உலகளாவிய பொருட்களின் விலை அதிர்ச்சிகள் காரணமாக மார்ச் மாதத்தில் 8.5%ல் இருந்து கீழ் நோக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்பிஐ கணிப்பு
 

ஆர்பிஐ கணிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியானது ஜிடிபி குறித்தான கணிப்பினை 7.2% ஆக குறைத்துள்ளது. எனினும் இந்தியாவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களின் மத்தியில், உலக பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் எதிராக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால வளர்ச்சி

எதிர்கால வளர்ச்சி

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலுவான நடுத்தர கால வளர்ச்சி கண்ணோட்டம், மதிப்பீட்டிற்காக ஒரு முக்கிய காரணியாகவும் அமைந்துள்ளது. கடன் அளவீடுகளிலும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டாடும். 2024 – 2027ம் நிதியாண்டிற்கு இடையே சுமார் 7% வளர்ச்சி இருக்கலாம் என ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

சவால்கள்

சவால்கள்

இது அரசின் உள்கட்டமைப்பு துறை மீதான கவனம், நிதித்துறையில் உள்ள அழுத்தங்களை குறைப்பது, சீர்திருத்தங்கள் என பல நடவடிக்கைகளை அரசு வளர்ச்சியினை மேம்படுத்த அரசு எடுத்து வருகின்றது. எனினும் கூட இன்றும் சில சவால்கள் உள்ளன. சீரற்ற பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் சீர்திருத்திருத்தங்கள் என பலவும் அச்சங்களும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fitch revises india’s outlook to stable from negative

Fitch revises india’s outlook to stable from negative/இந்தியாவுக்கு சபாஷ் சொன்ன ஃபிட்ச்.. நெகட்டிவில் இருந்து ஸ்டேபிள்.. செம்ம அப்டேட்!

Story first published: Friday, June 10, 2022, 16:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.