FD-ஐ விட அதிக லாபம் தரும் SB அக்கவுண்ட்: இந்த 5 வங்கிகளை கவனிங்க!

banks gives 7% interest on savings account in tamil: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்த வங்கி வட்டி விகிதங்களுக்கு மத்தியில், உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பது ஒரு நல்ல யோசனையல்ல. மக்கள், குறிப்பாக மில்லினியல்கள், அதிக வருமானத்தைப் பெறுவதற்காக வங்கிகளில் பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, பங்குச் சந்தைகளிலும் கிரிப்டோவிலும் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இருப்பினும், முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில், சேமிப்புக் கணக்குகளில் ஈர்க்கக்கூடிய வருமானத்தை வழங்கும் பல வங்கிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறு நிதி வங்கிகள் ஆகும்.

பேங்க் பஷார் (BankBazaar) தொகுத்த தரவுகளின்படி, இந்த சிறு நிதி வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

  1. AU சிறு நிதி வங்கி – AU Small Finance Bank

AU சிறு நிதி வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு 7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.

  1. ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி – Equitas Small Finance Bank

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 7% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

  1. உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி – Ujjivan Small Finance Bank

இந்த வங்கியில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 6.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

  1. ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி – Equitas Small Finance Bank

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 50 லட்சம் வரை டெபாசிட் செய்வதற்கு 7 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

  1. சூர்யோதாய் சிறு நிதி வங்கி – Suryoday Small Finance Bank

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களும் சேமிப்புக் கணக்குகளுக்கு 6.25 சதவீதம் வரை வட்டியைப் பெறலாம். இருப்பினும், அவர்கள் சராசரியாக ரூ. 2,000 மாதாந்திர இருப்புத் தேவையைப் பராமரிக்க வேண்டும்.

இந்த வங்கிகளில், முதலீட்டாளர்கள் அதிக வட்டி விகிதங்களுக்கு மட்டும் செல்லாமல், நெட் பேங்கிங் சேவைகள், ஏடிஎம்கள் மற்றும் கிளை வசதிகள் போன்ற பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.