சென்னையில் விசாரணைக் கைதி மரணம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

Chennai Kodungaiyur custodial death case transfer to CBCID: சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்தது பரபரப்பைப் ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டு மாதங்களுக்குள் சென்னையில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். ஆனால், தங்கள் தரப்பில் ‘கஸ்டடி’ மீறல்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியுள்ள நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வடசென்னை கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், திருவள்ளூர் மாவட்டம் அலமதி அருகே உள்ள முந்திரி தோப்பு பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற எஸ்.ராஜசேகர் (33) என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்தார். அவர் உடல் நலக் குறைவால் இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதி ராஜசேகர், கொள்ளை, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 27 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், சோழவரம் காவல்நிலையத்தில் அவரது பெயரில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் போஸீசார் தரப்பில் கூறப்படுகிறது. கொடுங்கையூர் வழக்கில் ராஜசேகரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா; ஆளுநரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

சமீபத்திய குற்றத்தை ராஜசேகர் ஒப்புக்கொண்டதாகவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜசேகர், அனைத்தையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் காவல் நிலையத்தில் கஸ்டடியில் வைக்கப்பட்டார். அப்போது அவர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதை அடுத்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தோம். பின்னர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பின்னர், மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

“எங்கள் முதற்கட்ட விசாரணையில், அவரைக் கையாண்ட காவல்துறையினர் தரப்பில் கஸ்டடி மீறல்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இறந்தவரின் உடலில் எந்த காயமும் இல்லை,” என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் போலீஸ் காவலில் இறந்துவிட்டதால், மாஜிஸ்திரேட் விசாரணை தொடரும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஏப்ரல் மாதம், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வி.விக்னேஷ், போலீஸ்காரர்களால் தாக்கப்பட்டு, செக்ரடேரியட் காலனி காவல் நிலையத்தில் இறந்ததாக வழக்கு, நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.