ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 2  லக்ஷர்-இ-தொய்பா 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என்றும் காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதை தடுக்க ராணுவமும், காவல்துறையும் தீவிர ரோந்துபணி மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  ஜம்மூ காஷ்மீரில் யாத்திரை செல்ல உள்ள பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் யாத்ரீகர்கள், தங்களின் ஆதார் அட்டையை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் யாத்ரிகர்களுக்கு மருத்துவ வசதிகள், தங்குமிடங்கள், குடிநீர் போன்ற அடிப்பட வசதிகளும் போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினர், ஸ்ரீநகரின் பெமினா பகுதியில் பதுங்கி யிருந்த, பாகிஸ்தானில் இயங்கும் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிfகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்ளை சந்தித்த காஷ்மீர் மாநில ஐஜிபி விஜயமாகுர், ( Inspector General of Police Kashmir, Vijay Kumar) ஜம்மு காஷ்மீரில், இந்த ஆண்டில் மட்டும்  100 பயங்கரரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும்,  இவர்களில், 29 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளும் அடங்கும்.  63 பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா  அமைப்பை சேர்ந்தவர்கள். 24 பேர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டு முதல் 5 மாதங்கள் 12 நாட்களில் 50 பயங்கரவாதிகள் கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.