தருமபுரியில் தேர் விபத்து; இரண்டு பேர் உயிரிழப்பு

Tamil Nadu: 2 killed, several injured as temple chariot collapses on devotees in Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) மாலை கோயில் தேர் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் இதேபோன்ற ஒரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

தேர் விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை மாலை, பாப்பாரப்பட்டியில் உள்ள மாதேஹள்ளியில் உள்ள கோயில் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாலை 6.30 மணியளவில் காளியம்மன் கோயிலின் 30 அடி தேர் வைகாசி திருவிழாவையொட்டி வீதி உலா வரும் போது, ​​சரிந்து விழுந்தது.

இதையும் படியுங்கள்: தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு; ஸ்டாலின், துரைமுருகனுக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ்

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, அந்த வீடியோவானது தேர் இடிந்து விழுந்ததையும், சிக்கிக் கொண்டவர்களை மீட்க மக்கள் அலறியடித்து ஓடுவதையும் காட்டுகிறது.

இது குறித்து indianexpress.com உடன் பேசிய தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் சி கலைசெல்வன், தேரின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய இருவர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.

தருமபுரி எம்.பி., டாக்டர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்டனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேர் ஊர்வலத்தை அனுமதிக்கும் முன், தேர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகரன் (57), சரவணன் (50) ஆகியோரின் மறைவு வருத்தமளிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரலில், தஞ்சாவூரில் இதேபோன்ற கோவில் தேர் ஊர்வலத்தின் போது, உயர் அழுத்த மின்னழுத்த கேபிள், கோவில் தேர் மீது மோதியதில், 11 பேர் உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.