வாழ்வா-சாவா கட்டத்தில் இந்திய அணி .. தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா?

வாழ்வா சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களமிறங்க உள்ளது.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2ஆவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும். இதனால் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

ind sa news

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருவது அப்படியே தெரிகிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், பவுமாவும், பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, வெய்ன் பார்னெலும் நல்ல நிலையில் உள்ளனர். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத குயின்டான் டி காக் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களில் கண்ட வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும்.

ind sa news

அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இந்திய அணியினர் வெற்றி கணக்கை தொடங்க எல்லாவகையிலும் தங்களது பலத்தை வெளிப்படுத்துவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
 
newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.