வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்


’ராம்ராஜ் காட்டன்’ சர்வதேச அளவுக்கு பிரபலமான பெயர்! கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய்விடுமோ என்றிருந்த வேட்டியை மீட்டெடுப்பதில் இந்த நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் பெயர் நாகராஜ்! இந்த நிறுவனம் ரூ 1000 கோடிக்கு மேல் வியாபாரம் பார்க்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கத்துல கைக்காட்டி புதூர்னு என்ற சின்ன கிராமம் தான் நாகராஜின் பூர்வீகம்.

இவர் படித்தது பத்தாம் வகுப்பு தான். ஒரு சமயத்தில் ஊருக்குள்ள ஒருவர் அம்பாசிடர் காரில், வேட்டி, சட்டையில் கம்பீரமா போனார். அவர் யார் என நாகராஜ் விசாரித்த போது ஜவுளி வியாபாரம் செய்பவர் என தெரிந்து கொண்டார்.

வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்

அப்போது தான் ஜவுளி வியாபாரம் பண்ணா, நாமளும் கார்ல போகலாம்னு விளையாட்டுத்தனமா ஒரு விஷயம் அவர் மனசுல பதிஞ்சது. அது தான் முதல் விதை!!
பின்னர் மார்க்கெட்டிங் வேலை செய்தார். 

வெள்ளை வேட்டி கட்டிட்டு, கார்ல ஊருக்குள்ள போகணும் என்பதே என்னுடைய ஒரே லட்சியமாக இருந்தது – நாகராஜ்

ஒருகட்டத்தில் சொந்த தொழில் தொடங்க நம்பிக்கை வந்தது. சிறிய பணத்தில் திருப்பூரில் துணி ஏற்றுமதியை நாகராஜ் தொடங்கினார்.
தனது பெயர் நாகராஜ் மற்றும் தந்தையின் பெயர் ராமசாமி என இரண்டையும் சேர்த்து ’ராம்ராஜ்’ என பெயர் வைத்து வேட்டிகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்

அவரின் கடும் உழைப்பால் ராம்ராஜ் வேட்டிகள் ந்தியாவின் நம்பர்-1 பிராண்டாக மாறியது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு இவர் தயாரித்தது 20,000 வேட்டிகள்.

இன்று தினசரி 1.5 லட்சம் வேட்டிகள் விற்பனை ஆகின்றன. சர்வதேச விமான நிலையங்களிலும் இவரது வேட்டி ஷோரூம்கள் கடை விரிக்கப்பட்டு வெளிநாட்டவர்களும் இவரது கம்பெனி வேட்டியை வாங்கிச் செல்கின்றனர். ஆன்லைன் விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.

 

வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்

நாகராஜ் ஒருமுறை அளித்த பேட்டியில், நம்ம ஒரு பொருளை தங்கமா தயாரித்தாலும் அதற்கு சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லைன்னா மரியாதையும் கிடைக்காது. இதை 30 வருஷமா வேட்டி கட்டியிருப்பதால் அனுபவித்திருக்கிறேன்.

வேட்டி கட்டிக்கிட்டு பேங்க்குக்கு போனா பேண்ட் போட்ட ஆபீஸ் பையனையே மேனேஜர் முதலில் கூப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். முனிசிபாலிட்டி முதல் ஹோட்டல் வரை இதுதான் நிலைமை. ஒரு நட்சத்திர விடுதியில என் நண்பர்களோட போனேன். பேண்ட் சட்டையில் இருந்த 9 பேரை உள்ள விட்டுட்டு என்னை வெளிய நிறுத்திட்டாங்க.

இப்போது குமரி முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை பொறுப்பில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும், எல்லா அரசு அலுவலர்களும், அனைத்து ஆன்மீக வாதிகளும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரல் கொடுத்தது வேட்டிக்காக மட்டும் தான் என கெத்தாக கூறுகிறார்..!

வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.