Nothing Phone (1): நத்திங் போன் (1) இருக்க… ஆப்பிள் ஐபோன் எல்லாம் எதுக்கு மக்களே!

Nothing Phone (1): டெக் நிறுவனமான நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போன் குறித்த செய்தி தான் பல நாள்களாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நிறுவனம் விரைவில் தனது புதிய போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது இந்த போனின் ஃபர்ஸ்ட் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவல்களை நிறுவனம் அளித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கில், நத்திங் போன் (1) பேக் பேனல் வடிவமைப்பை நிறுவனம் வெளிப்படுத்தியது. ஒரு ட்விட்டர் பதிவில் வரவிருக்கும் ஃபோன் (1) பின்பக்க படத்தை கிளியுடன் நிறுவனம் பகிர்ந்து கொண்டது.

ஆப்பிள் போனுக்கு மாற்றாக தங்களிள் போன் இருக்கும் என்று கூறிவரும் நத்திங் நிறுவனம் விலை, அம்சங்கள் என எதிலும் சமரசம் செய்யாமல் தங்களின் அடுத்தடுத்த படிகளை முன்னோக்கி வைத்து வருகிறது.

Online Shopping: இத பாக்காம எந்த பொருளும் வாங்காதீங்க!

நத்திங் போன் (1) ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் – Nothing Phone (1) First Look

போனின் பின்பக்கம் டிரான்பரென்ட் டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது. கிளி ஒன்று போனின் மேல் பக்கம் அமர்ந்துள்ளது. பின்பக்கம் இரட்டை கேமரா கொண்ட அமைப்புள்ளது.

பின்புறம் கண்ணாடி பேனல் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட், போல்ட் என அனைத்தும் பயனர்களுக்கு காண முடியும். இதுவரை நீங்கள் கண்டிராத தோற்றத்தில் இந்த போன் காட்சியளிக்கிறது.

போன் வெளியீட்டுக்கு முன் சில நிறுவனங்களில் கான்செப்ட் போன்கள் வெளியாகும். ஆனால், உண்மையான போன் வெளிவரும் போது மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். நத்திங் விஷயத்தில் அதுவும் இல்லை.

ஒரு கான்செப்ட் டிசைன் போன் போலவே இருக்கிறது. பயனர்களின் கண்களை கவர்ந்திழுக்கும் இந்த போன் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது. போனின் அம்சங்கள் குறித்து சில தகவல்கள் மட்டுமே இதுவரை கசிந்துள்ளது.

நத்திங் போன் (1) அம்சங்கள் – Nothing Phone (1) Specifications

கசிந்த தகவல்களின்படி, போன் OLED டிஸ்ப்ளே உடன் வரும் என்று தெரிகிறது. மேலும், இது 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை பெறும் என்று கூறப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்படலாம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

OIS கேமராவுடன் இதன் முதன்மை சென்சார் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. 4,500mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவை கூடுதல் அம்சங்கள். முக்கியமாக இதில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS நிறுவப்பட்டிருக்கும்.

நத்திங் போன் (1) தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள சமயம் தமிழ் டெக் செய்தியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.