Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

Nothing Phone (1) Video: உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1) தொடர்பான தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இந்த சூழலில், நிறுவனம் போனின் பின்பக்கம் தெரியும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் பல சுவாரஸ்ய அம்சங்கள் நிறைந்துள்ளன. ஜூலை 12 ஆம் தேதி நத்திங் போன் 1 உலகளவில் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் போனின் பின்பைக்க புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

5G: 4ஜியை விட 10 மடங்கு வேகமாம்! 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!

வீடியோவில் கிடைத்த தகவல்கள்

நத்திங் நிறுவனத்தின் வீடியோவில், போனின் வலதுபக்கம் பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. முறையே இடதுபுறப் பக்கவாட்டில் வால்யூம் பட்டன்கள் உள்ளன. போன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை பெறுகிறது.

Nothing Phone (1): நத்திங் போன் (1) இருக்க… ஆப்பிள் ஐபோன் எல்லாம் எதுக்கு மக்களே!

மிக முக்கியமாக, போனில் ஒளிரும் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. விழிப்பூட்டல்களுக்கு இந்த விளக்குகள் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேமராவைச் சுற்றுலும் C வடிவில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லைட்டுகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மிளிரும் என்பதும் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

நத்திங் போன் (1) அம்சங்கள் – Nothing Phone (1) Specifications

கிடைத்த தகவல்களின்படி, போன் OLED டிஸ்ப்ளே உடன் வரும் என்று தெரிகிறது. மேலும், இது 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை பெறும் என்று கூறப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்படலாம்.

Xiaomi: சியோமி போன்களின் பேட்டரியை வெறும் ரூ.499க்கு மாற்றலாம்!

OIS கேமராவுடன் இதன் முதன்மை சென்சார் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. 4,500mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவை கூடுதல் அம்சங்கள். முக்கியமாக இதில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS நிறுவப்பட்டிருக்கும்.

போன் வெளியீடு மற்றும் விலை விவரங்கள் – Nothing Phone (1) Price in India

ஜூலை 12, 2022 அன்று வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. அறிமுக சலுகைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Online Shopping: இத பாக்காம எந்த பொருளும் வாங்காதீங்க!

எனினும், தமிழ்நாட்டில் போன் தயாரிக்கப்படுவதால், இதன் விலை ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.