இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்


இலங்கையில் எதிர்காலத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளதுடன் தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

45 இலட்சம் தொழில்வாய்ப்புகள்

மேலும் தெரிவிக்கையில், 45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் தொடர்பில் நான் இங்கு கருத்து வெளியிடுகிறேன்.

இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்

பாரிய பொருளாதார நெருக்கடியால் கட்டுமான தொழில் வீழ்ச்சி: தொழிலாளர்கள் விசனம் (Photos) 

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள், நிர்மாணம், விவசாயம் ஆகிய துறைகளின் தொழில்வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை

இன்னும் தீவிர நெருக்கடி நிலை ஏற்படவில்லை. தற்போது பெற்றோல், டீசல் எரிவாயு என்பவற்றுக்கான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்

தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும்? எனவே அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.