சிறு நகரங்களுக்கு படையெடுக்கும் டிசிஎஸ் அலுவலகம்… தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் தற்போது சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊழியர்களின் வசதி, செலவு குறைவு ஆகியவை காரணமாக தற்போது மெட்ரோ அல்லாத நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கிவிட்டன.

அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் மெட்ரோ அல்லாத நகரங்களில் விரைவில் தங்களது அலுவலகத்தின் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசிஎஸ் ஊழியரின் 7 வருட போராட்டம்.. மாபெரும் வெற்றி..! வீடியோ

டிசிஎஸ் அலுவலகங்கள்

டிசிஎஸ் அலுவலகங்கள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் என்பதும் இந்த நிறுவனத்தின் அலுவலங்கள் சென்னை, பெங்களூர் உள்பட பல மெட்ரோ நகரங்களில் செயல்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

 சிறு நகரங்கள்

சிறு நகரங்கள்

ஆனால் இந்த மெட்ரோ நகரங்களில் உள்ள அலுவலங்களுக்கு, சிறு நகரங்களிலிருந்து வரும் பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர் என்பதும் அவர்கள் மெட்ரோ நகரங்களில் தங்கி பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐடி நிறுவனத்தின் கிளைகள்
 

ஐடி நிறுவனத்தின் கிளைகள்

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் சிறு நகரங்களிலிருந்து மெட்ரோ நகரங்களுக்கு ஊழியர்கள் வருவதை தவிர்ப்பதற்காகவே இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் அலுவலகத்தை தொடங்க பல ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

 சிறுநகரங்களில் டிசிஎஸ்

சிறுநகரங்களில் டிசிஎஸ்

அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் சிறுநகரங்களில் அலுவலகத்தில் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் ஒரு சில சிறு நகரங்களில் கிளைகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதே முடிவை தற்போது டிசிஎஸ் நிறுவனம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை - மதுரை

கோவை – மதுரை

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் டிசிஎஸ் அலுவலகங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் கோவையில் தனது அலுவலகத்தை தொடங்க முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக டிசிஎஸ் நிறுவனம் கோவை, கவுகாத்தி, நாக்பூர் ஆகிய நகரங்களில் அலுவலகங்களை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அடுத்தகட்டமாக வேறு சில நகரங்களிலும் அலுவலகங்களை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்ட போதிலும் இன்னும் சில ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்து வருகின்றனர். இவர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதற்கு, அவர்களுடைய நகரத்திற்கு அருகே கிளைகள் வைத்தால் சாத்தியம் என்று முடிவு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிறு நகரங்களின் வளர்ச்சி

சிறு நகரங்களின் வளர்ச்சி

மேலும் சிறுநகரங்களில் டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அலுவலகங்களை திறந்தால் அந்நகரத்தில் உள்ள பணப்புழக்கம் அதிகமாகும் என்றும் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சிறுநகரங்களில் டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக இடங்களில் கிளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கை தரம்

வாழ்க்கை தரம்

சிறுநகரங்களில் டிசிஎஸ் தங்களது கிளை அலுவலகங்களை தொடங்குவதன் காரணமாக அந்த நகரங்களின் உள்கட்டமைப்பு, செலவுகள் ஆகியவை மெட்ரோ நகரங்களை கணக்கிடும்போது மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறு நகரங்களில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை தரம் ஆகியவவை ஐடி நிறுவனங்களின் வருகையால் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS Opens New Offices in Non Metro Cities Soon!

TCS Opens New Offices in Non Metro Cities Soon| சிறு நகரங்களுக்கு படையெடுக்கும் டிசிஎஸ் அலுவலகம்… தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

Story first published: Monday, July 4, 2022, 7:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.