திருப்பூர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் எச்சரிக்கை.!

திருப்பூரில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

* ஆட்டோவில் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும். 

* அனுமதியை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது. 

* மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டுனர்கள் கதவு பூட்டப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும். 

* விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.

* போக்குவரத்து விதி மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டிப்பாக ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். 

* குழந்தைகளை ஏற்றி செல்லும் பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்க வேண்டும். 

* மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். 

* வேகத்தடைகள் உள்ள பகுதிகளிலும் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் கவனமாக கடந்து செல்ல வேண்டும். 

* வாகனத்தில் பிரேக் நல்ல முறையில் உள்ளதா என அடிக்கடி ஓட்டுனர்கள் கண்காணிக்க வேண்டும். 

* போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.