மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் முடிவு!

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது சுகாதாரத் துறையினரை அச்சமடையச் செய்துள்ளது. இதற்கிடையே, இந்தியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில், முதன் முறையாக, ஒமைக்ரான் பிஏ.2.75 வகையைச் சேர்ந்த வைரஸ் தொற்று, இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. தொற்று பாதித்த இருவரும் சமீபத்தில் இந்தியாவிற்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. எனினும், பிஏ 2 வகையின் திரிபான பிஏ.2.75 தொற்று, மிகவும் ஆபத்தை ஏற்படுத்தாது என, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு – 22 வயது இளைஞர் கைது!

இதற்கிடையே, நியூசிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 9,802 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், 22 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர். நியூசிலாந்து நாட்டில் குளிர் காலம் தொடங்கி உள்ளதால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த காலக் கட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, உயர் மட்டக் குழுவுடன், விரைவில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா முதல் அலையை முதன் முதலில் கட்டுக்குள் கொண்டு வந்த நாடு நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.