தேசிய தடகளப் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை., தங்கப்பதக்கம்.! கிராமத்தினர் உற்சாக வரவேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அவரது சொந்த கிராம மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

கடந்த ஜூன் மாதத்தில் தமிழக தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையில் 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கோல்டு வால்ட் என்று அழைக்கப்படுகின்றன கோல் ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கலந்து கொண்டார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் பகுதியில் இளங்கோவன் என்ற விவசாயி வசித்து வருகிறார் .இவருக்கு பரணிகா என்ற மகள் இருக்கிறார். பரணிகா தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் கோல்டு வால்ட் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

4.05 மீட்டர் அளவிற்கு உயரத்தை தாண்டி பரணிகா சாதனை செய்துள்ளார். அவர் தேசிய அளவில் தடகள போட்டியில் தங்கம் வென்றதை தொடர்ந்து ஊருக்கு திரும்பிய பரணிகாவுக்கு அவரது கிராம மக்கள் மிகப்பெரிய உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.