பல அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு-‘டோலோ 650’ மாத்திரை தயாரிக்கும் ‘மைக்ரோ லேப்’ நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 20 இடங்களில், வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

latest tamil news

கொரோனா தொற்று துவங்கிய, 2020ல் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளில், ‘டோலோ 650’ முக்கியமானதாகும். தொற்று பாதித்த பலரும், அரசின் கண்காணிப்பு மையத்துக்கு செல்ல பயந்து, மருந்தகங்களில், இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர். இதனால் இந்த மருந்து நாடு முழுதும் பிரபலமானது. ‘டோலோ 650’ பிரபலமானது. விற்பனையும் ஜரூராக இருந்தது.
இந்நிலையில், இந்த மாத்திரையை தயாரிக்கும், ‘மைக்ரோ லேப்ஸ் நிறுவனம்’ வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள அலுவலகம் உட்பட டில்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழகம், கோவாவிலுள்ள அலுவலகங்கள்.நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் தலீப் சுரானா, இயக்குனர் ஆனந்த் சுரானா வீடு என, 40 இடங்களில் இன்று வரை விடிய, விடிய ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.

latest tamil news

கொரோனா நேரத்தில், பலரும் தொழில் நஷ்டம், வேலையின்றி தவித்து வந்தனர். ஆனால் இந்நிறுவனமோ, 350 கோடி மாத்திரைகள் விற்று, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்தவை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.