பவர்ஸ்டார் பேட்டரி, 50MP கேமரா உடன் Tecno Spark 8P அறிமுகம் – இதோட விலை உங்கள ஆச்சரியப்படுத்தும்!

Tecno Spark 8P Specifications: விலை மலிவான ஸ்மார்ட்போன்களை தான் பெரும்பாலான பயனர்கள் விரும்புகின்றனர். அவர்கள் சட்டை பையை காலி செய்யாத போன்களை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள டெக்னோ ஸ்பார்க் 8பி போனை கருத்தில் கொள்ளலாம்.

இதற்கான காரணங்கள் பல உள்ளன. போனில் விலைக்கேற்ற சிறந்த கேமரா, நல்ல பேட்டரி போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த பட்ஜெட் போன் மீடியாடெக் புராசஸர், DTS ஸ்டீரியோ ஒலியுடன் வருகிறது. Tecno Spark 8P ஸ்மார்ட்போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். உங்கள் காத்திருப்புக்கு ஏற்ற மதிப்பை இந்த போன் வழங்கும்.

வெறும் ரூ.9,000 பட்ஜெட்டில் வெளியான Lava Blaze ஸ்மார்ட்போன்!

டெக்னோ ஸ்பார்க் 8பி விலை (Tecno Spark 8P Price in India)

Tecno Spark 8P ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் வகையுடன் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த போன் வாங்கலாம். பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவில், புதிய Tecno Spark 8P ஸ்மார்ட்போன், Samsung, nokia, infinix, realme, xiaomi, moto, micromax, lava போன்ற நிறுவனங்களின் மலிவு விலை போன்களுடன் நேரடியாக போட்டியிடும் என்று தெரிகிறது.

Xiaomi 12S Ultra Launch: போன் கேமரானா இப்டி இருக்கணும்; ஐபோன் கேமராவுக்கு குட்பை!

டெக்னோ ஸ்பார்க் 8பி அம்சங்கள் (Tecno Spark 8b features)

6.6 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேமீடியாடெக் ஹீலியோ ஜி85 புராசஸர்4ஜிபி ரேம் + 3ஜிபி ரேம் பிளஸ்64ஜிபி ஸ்டோரேஜ் மெமரி50MP முதன்மை கேமரா8MP செல்பி கேமரா5000mAh பேட்டரி / 33W பாஸ்ட் சார்ஜிங்

இந்த போனில் 6.6 இன்ச் முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே, 1080 x 2480 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும். கூடுதலாக, இந்த போனின் செயல்திறனுக்காக மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) புராசஸர் கொடுக்கப்படும்.

டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைப் பெறும். இதனை சக்தியூட்ட 33W வேகமான சார்ஜிங் அம்சம் கிடைக்கிறது. புதிய மலிவு விலை டெக்னோ போனானது 4ஜிபி ரேமுடனும், 3ஜிபி விர்ச்சுவல் ரேமுடன் வருகிறது.

Telecom: 100 ரூபாய்க்கும் குறைவான 3 ரீசார்ஜ் திட்டங்கள்; தினசரி 2ஜிபி டேட்டா!

டெக்னோ ஸ்பார்க் 8பி போனில் DTS ஸ்டீரியோ சவுண்ட் ஒலித்திறனும் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இந்த மொபைலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பு சற்று ஸ்டைலாக இருக்கிறது.

ஸ்மார்ட்போனில் படம்பிடிக்க உதவியாக 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்படும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.